ஒரே இரவில் நடந்த கோர விபத்து! இன்று ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி!

pm modi odisa

ரயில் விபத்து நிகழ்ந்த ஒடிசா மாநிலத்திற்கு இன்று பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவில் நேற்று ஒரே இரவில் மூன்று ரயில்கள் இடையே ஏற்பட்ட விபத்தால்,  நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயில் விபத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நேர்ந்த  பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.

இந்த கூட்டத்தில் மீட்பு பணிகள், நிவாரணம், சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தற்போது மற்றோரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரதமர் மோடி இன்று ஒடிசாவுக்கு விரைந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட உள்ளார்.

இன்று ஒடிசா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, முதலில் பாலசோரில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட உள்ளார். பின்னர் கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். ரயில் விபத்து மீட்பு  ஈடுபட பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்