மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரானாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாதுகாப்பு அரண் அமைத்து பல நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நோய் பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கியம். தொடர்ந்து பேசிய அவர்,
சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சாத்தான்குளம் சம்பவத்தில் முதல்வர் பதவி விட்டு செல்லுங்கள் என கூறிய ஆ.ராசா ஒரு வடிகட்டிய… அரசியல் நாகரீகம் கருதி சொல்லவில்லை… ஊழல் வழக்கில் சிறை சென்ற ஆ.ராசா முதல்வரை பதவி விலக சொல்ல உரிமையில்லை.. தகுதியில்லை.. ஆ.ராசா தன்னை அதிமேதாவியாக நினைத்து கொண்டு விளம்பரத்திற்காக அறிக்கை விடுகிறார் என தெரிவித்தார்.
சமீபத்தில் சாத்தான்குளம் சம்பவத்தில் முதல்வர் பதவி விட்டு செல்லுங்கள் என ஆ.ராசா அறிக்கை வெளிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…