தொடர் விடுமுறை! சிறப்பு பேருந்துகளை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

SpecialTrain

தமிழகத்தில் வார இறுதி நாட்கள், சுதந்திரம் தினம் தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் நேற்று அறிவித்திருந்தது. வார இறுதி நாட்களான ஆக.12, 13 மற்றும் சுதந்திர தினமாக ஆக.15-ல் விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து ஆக.11ம் தேதி கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய முக்கிய இடங்களுக்கு ஆக12ல் 200 சிறப்பு பேருந்துகளும், பெங்களுருவில் இருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது.

தொடர் விடுமுறை என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இடக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆக.11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆக.11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளை தொடர்ந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, வரும் 11ம் தேதி தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15க்கு ரயில் (06051) நெல்லையை சென்றடையும். இதேபோல் நெல்லையில் 12-ஆம் தேதி மாலை 5.50க்கு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 4.10க்கு தாம்பரம் சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்