,

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!

By

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் அருகே திருமணமான ஒன்றரை வருடமேயான இளம்பெண் மர்மமான நிலையில் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாணதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் தஞ்சை மாவட்டம் ஆண்டாலூர் கிராமத்தை சேர்ந்த சுபிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது.

இந்நிலையில் ராஜ்குமார் ஓட்டுநர் என்பதால் திருமணமான சில மாதங்களில் வேலைக்கு செல்லவேண்டிய நிலையில்  மனைவியிடம் சரியாக பேசவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த சுபிதா தன் அம்மா வீட்டிற்க்கு சென்று நடந்ததை சொன்னதும் மகளை சமாதானப்படுத்தி பெற்றோர் மாப்பிள்ளை வீட்டில் கொண்டுவிட்டுள்ளனர்.

இந்நிலையில் சுபிதா இறந்துவிட்டதாகவும் ஜெயம்கொண்டான் மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும் சுபிதாவின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அறிந்த சுபிதாவின் உறவினர்கள் அவரின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.இதனையடுத்து மாப்பிள்ளையையும் அவரது தாயாரையும் கைது செய்யுமாறு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Dinasuvadu Media @2023