டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
டாக்டர்.ஏபிஜே அப்துல்கலாம் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயது முதற்கொண்டே துடிப்புடன் செயல்பட்ட போதிலும், தனது முதுமைப் பருவத்திலும் அந்த துடிப்புடன் செயல்பட்டார். இந்நிலையில், இவர் விஞ்ஞானி, பிரதமரின் ஆலோசகர், குடியரசுத் தலைவர் என பன்முகத்தன்மை கொண்ட தலைமை பொறுப்புகளை வகித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜூலை 27-ஆம் தேதி, இவர் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 104. இதனையடுத்து, பல்வேறு தலைவர்களும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…