மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலு நலமாக இருக்கிறார் என்று மருத்துவத்துறை அமைச்சர் தகவல்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்கி வரும் நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய வடிவேலு, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடிவேலு நலமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலு நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.
இதற்குமுன் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் புத்தாண்டை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் எனவும் கூறினார். மேலும், வெளிநாட்டில் இருந்து வருவோர் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்துதல் அவசியம் என்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…
குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன்…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக்…
திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை…