Mansoor Ali khan [file image]
Mansoor Ali khan: பிரச்சாரத்தின் போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் மன்சூர் அலிகானை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
தற்பொழுது, அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மிகவும் முடியாத நிலையில் மன்சூர் அலிகான் இருப்பதாக தெரிகிறது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…