Edapadi palanisamy [Image source : EPS]
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனைக்கு உட்பட்டு,பின்னர் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அவருக்கு இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று ஆளுநர் ரவியை சந்தித்து, எதிர்க்கட்சியினரான அதிமுகவினர் , தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தற்போது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக ஊழல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், மேலும், தமிழக அமைச்சரவைல் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தியும் 21 மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…