[Image source : Twitter/@Kishoreamutha]
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தமிழக மின்சாரத்துறை , டாஸ்மாக் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த செந்தில் பாலாஜியை அண்மையில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு அவருக்கு இதய அறுவை சிகிச்சை காரணமாக ஓமந்தூரரர் மருத்துவமனையில் இருந்து அதன் பிறகு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை இன்று நடந்து முடிந்தது
இதற்கிடையில், கைது மற்றும் இதய சிகிச்சை காரணமாக செந்தில் பாலாஜி துறைகள் மாற்றப்பட்டு மற்ற அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டது. இருந்தும் இலாகா இல்லாதா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்று கூறியும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக போராட்டத்தை அறிவித்தது.
அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலும், சேலத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையிலும், மற்ற ஊர்களில் அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்கள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்பாட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு , சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…