அதிமுக – அமமுக இணையுமா ? என்ற கேள்விக்கு தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.
அண்மையில் டெல்லியில் முதலமைச்சர் பழனிசாமி சசிகலா வருகை குறித்து கூறுகையில்,சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ள மாட்டோம் என்பதில் 100% உறுதியாக உள்ளோம். ஜெயலலிதா இருந்தபோது சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை .சசிகலாவுடன் இருந்தவர்கள் அதிமுகவில் இணைந்துவிட்டார்கள் என்று கூறினார்.இதனிடையே 2017 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களை சசிகலாவின் உறவினரும் , அமமுக பொதுச்செயலாளருமான தினகரன் சந்தித்தார்.அப்பொழுது அவரிடம் அதிமுக – அமமுக இணையுமா ? என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த தினகரன் ,அரசியல் குறித்து பின்னர் பேசுகிறேன்.இந்த நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. சித்தி விடுதலையான மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…