மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
இதன் பின்னர் இறுதியாக மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முகமது ஜான் அதிமுகவின் வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் இணை செயலாளராக உள்ளார்.மேலும் சந்திர சேகர் அதிமுக மேட்டூர் நகர கழக செயலாளராக உள்ளார்.மேலும் அதிமுகவின் இன்னொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…