அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ,இன்று இரவு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.தேர்தலுக்கு பின் முதன்முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி பயணம்:
இந்நிலையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள்,கோவை சென்று அங்கிருந்து இரவு விமானம் மூலம் டெல்லிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,அவருடன் தங்கமணி,எஸ்பி வேலுமணி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.
பிதமரை சந்திப்பு:
இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாகவும்,இந்த சந்திப்பின்போது,தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் மேகதாது அணை குறித்து பிரதமரிடம் அவர் முறையிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும்,அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவினருக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விவாதிப்பார் எனவும் தகவல் வெளியானது.
வழக்கு:
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது,இதனால், திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில்,கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களின் பட்டியலை ஆளுநரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடுத்துள்ளார். இதற்கிடையில்,வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததால் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான்,அதிமுக தலைமை டெல்லி சென்றுள்ளது. ஏனெனில்,2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் அதிமுக -பாஜக கூட்டணி தற்போது வரை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…