கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளமான குழந்தைகள் அதரவின்றி உள்ளனர்.
இதன்காரணமாக,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும்,
இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கூறுகையில்,”கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.
எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…