அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விவகாரம் தொடர்பாக,ரவி என்பவரது வீட்டில் தற்போது சோதனை நடைபெறுகிறது.
முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து குவித்ததாகவும்,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
முக்கிய ஆவணங்கள்:
இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர். பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் ஆகியவைற்றை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு பதிவு:
அதன்படி,முதற்கட்ட தகவல் அறிக்கையின்படி,எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள்,55% வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, 21 டிஎஸ்பி-க்கள் தலைமையில், சென்னை, கரூர் உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் சோதனை:
இந்நிலையில்,அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய ,ரவி என்பவரின் அண்ணா நகர் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தமிழக போக்குவரத்து துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட தனியார் நிறுவனமான டெடி இந்தியா நிறுவனத்தில் ரவி ஆலோசகராக இருந்துள்ளார்.ஏற்கனவே,கடந்த ஜூலை 22 ஆம் தேதி டெடி இந்தியா நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையின்போது, கிடைத்த சில தகவல்களின் அடிப்படையிலேயே, தற்போது ரவி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…