அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தி வருவதையடுத்து, போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பாக அதிமுக தொண்டர்கள் கூடினர். இவர்கள் போலீசார் அமைத்த தடுப்பு வேலிகளை அகற்றியதை தொடர்ந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சென்னை எம்.எல்.ஏ விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விடுதியின் முன்பாக போலீசாருடன் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜாராம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டுள்ளார். மேலும், அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா மற்றும் அதிமுக தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…