, ,

மீண்டும் அதிமுக கொடி பறக்கும்., முதல்வர் மாற்றி பேசியதை நானும் பார்த்தேன் – அமைச்சர் ஜெயக்குமார் வேதனை

By

முதல் முதலாக புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது அதிமுக தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி 14 ஆக குறைந்தது. தற்போது எதிர்கட்சிக்கும் 14 சட்டசபை உறுப்பினர்கள் இருப்பதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது. இதனால் பபுதுச்சேரி அரசியல் குழப்பம் நிலவுகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சரிடம், புதுச்சேரிக்கு ராகுல் காந்தி வருகையையொட்டி பெண்கள் பல புகார்களை தெரிவித்துள்ளார்கள். அதற்கு பொழிபெயர்பு செய்த முதல்வர் நாராயணசாமி தனக்கு ஆதரவான கருத்துக்களை கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, பொழிபெயர்பு என்பது ஒரு கலை, அதை தெரிந்தவர்கள் தான் பொழிபெயர்த்திருக்க வேண்டும்.

மேலும், அவர் பேசியதை நானும் பார்த்தேன், மாற்றி சொல்வது மிகவும் வேதனை அளிக்கும் விஷயம் என்று அமைச்சர் பதிலளித்தார். ஆகையால், இதுபோன்று சூழல் அங்கு இருக்கிறது என்று மக்களுக்கு தெரிகிறது. புதுச்சேரியில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். முதல் முதலாக புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது அதிமுக தான்.

மீண்டும் அதிமுக கொடி பறக்கக்கூடிய சூழல் உருவாகும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அதற்கு எதிராக அதிமுக வாக்களிக்குமா என்ற கேள்விக்கு, நிச்சயம் நடக்கும், எங்கள் கட்சி எதிராகத்தான் இருக்கிறது என கூறிய அமைச்சர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் அதிமுக அரசின் நிலை, அதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Dinasuvadu Media @2023