அதிமுக பொதுக்குழு, செயற்குழு சில மணி நேரங்கள் தாமதமாக கூட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தான் இன்று அதிமுக பொதுக்குழு கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 9-ஆம் தேதி காலை 8.50 மணிக்கு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்நிலையில் சில மணி நேரங்கள் தாமதமாக அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது அதிமுக பொதுக்குழு செயற்குழு 11 மணிக்கு கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக அண்மையில் அமைக்கப்பட்ட வழிகாட்டல் குழுவிற்கு என்னென்ன அதிகாரங்கள் என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…