தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்படுவதற்கு காரணம் முந்தைய அதிமுக அரசு கட்டுப்படுத்த தவறியதுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடக் கூடிய பணியை துவக்கி வைப்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்றிருந்தார். பின் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், தீவிர ஊரடங்கிற்கு பலன் கிடைக்க துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தேவை இருக்குமானால் முழு ஊரடங்கு நீக்கப்படும் எனவும் கூறியுள்ள அவர், தற்பொழுது ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதால் தான் இரண்டாம் அலை தற்பொழுது ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது அலையை முற்றிலும் ஒழித்து திமுக அரசு வெற்றி அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…