கோஷ்டி பிரச்சனையை தீர்க்கத்தான் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், இவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, அதிமுக மூத்த தலைவர்கள் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பி துறை உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது, சசிகலா விவகாரம், அதிமுக – பாஜக கூட்டணி, அரசியல் சூழல், உள்ளாட்சி தேர்தல், மேகதாது விவகாரம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் பேட்டியளித்துள்ளார் அப்போது பேசிய அவர், கோஷ்டி பிரச்சனையை தீர்க்கத்தான் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யாத அதிமுக தற்போது போராடுவது ஏற்புடையதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…