ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி பதவிக்கு எதிராக அதிமுக மனு!

அதிமுக எம்பி என ரவீந்திரநாத்தை அங்கீகரிக்க கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக மனு.
ஓ.பன்னீர்செல்வம் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுகவின் சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார். தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அவரை அதிமுக எம்.பி என அங்கீகரிக்கக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளாக செயல்படும் நிலையில், ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி பதவியை ரத்து செய்யுமாறு ஏற்கனவே, மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார்.
இதுதொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்காத நிலையில், அதிமுக மக்களவை உறுப்பினராகவே ரவீந்திரநாத் தொடர்கிறார். இதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாயை தேர்தல் அங்கீகரித்ததை அடுத்து, தற்போது அதிமுக எம்பி என ரவீந்திரநாத்தை அங்கீகரிக்க கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025