சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரிதான் என்று ஜே.சி.டி பிரபாகர் பேட்டி.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு என கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது சரி தான் என்றும் ஓபிஎஸ்-யின் நிலைப்பாடு தான் எனக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தர்மயுத்தம் மூலம் இணையும்போது யாரையும் சேர்க்கக்கூடாது என சொன்னதை இப்போது ஒப்பிட முடியாது என்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே எந்தவித கருத்து வேறுபாடு இல்லை என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் காரணமில்லை, உடன் இருந்தவர்களும் தான். அதிமுக தொண்டர்கள் சசிகலாவை அவரது சுற்றுப்பயணத்தில் சந்திக்கமாட்டார்கள் என்றும் அதிமுகவின் எதிர்கால நலனை சிந்திக்கக்கூடிய தலைமை கழக நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சசிகலாவை சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்துக்கு ஜெயக்குமார், கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி, அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…