ரூ.2500-க்கு அதிமுகவினர் டோக்கன்- திமுக வழக்கு..!

பொங்கல் பரிசு ரூ.2500-க்கு அதிமுகவினர் டோக்கன் வழங்குவதாக கூறி நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரூ.2500 டோக்கனை ரேஷன் கடை ஊழியர்களை தரவும், அதிமுகவினர் வழங்கக்கூடாது என திமுக வலியுறுத்தல்.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை அதிமுகவினர் வழங்கும்போது முறைகேடு நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பரிசுத்தொகை டோக்கனில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருப்பது தவறானவை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் டோக்கன் வழங்கினால் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்காத பெரும்பாலானோருக்கு பரிசுத்தொகை கிடைக்காது என திமுக தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவை பகுதியில் ரூ.2500-க்கான பரிசு தொகையை அதிமுகவினர் வழங்குவதாக கூறி அதிமுக, திமுகவினர் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025