கூட்டணி முறிந்ததாக சொன்ன அதிமுக, இப்போது பேசாதது ஏன்? – எச்.ராஜா

hraja

தமிழகத்தில் பாஜக மாநில அண்ணாமலை – அதிமுக இடையே ஏற்பட்ட மோதலால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து களம் காணுவோம் எனவும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பாஜகவுக்கு, இது பேரிடியாக அமைந்துள்ளது.

அதிமுகவின் முடிவு பாஜக தேசிய தலைவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது என்றே கூறலாம். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை தொண்டர்கள் கொண்டாடினர். இத முடிவிற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு அளித்திருந்தாலும்,  நிரந்தரமா? எனவும் எழுப்பியுள்ளனர். ஆனால், இந்த அறிவிப்பு குறித்து தமிழக பாஜக கூறுகையில், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை, இதுதொடர்பாக மேலிடம் பேசிய பிறகு கருத்து கூறுகிறோம் எனவும் தெரிவித்தனர்.

இதுபோன்று கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக மவுனம் காத்து வருகிறது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசும் வரை கட்சி நிர்வாகிகள் அமைதி காக்க வேண்டும் எனவும் அதிமுக  அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு கூட்டணி முறிந்ததாக சொன்ன அதிமுக, இப்போது அதை சொல்கிறதா..?  என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கூட்டணி முறிந்ததாக சொன்ன அதிமுக, இப்போது பேசாதது ஏன்?, பாஜகவுடன் கூட்டணி முறிந்துவிட்டது என அதிமுகவினர் இப்போது சொல்வது இல்லை என்பதே உண்மை. கூட்டணி முறிவு குறித்து ஏன் அதிமுகவினர் பேசவில்லை, அதன் உள்நோக்கம் என்ன என்பதற்குள் நான் சொல்லவில்லை. கூட்டணி விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும் என கூறியுள்ளார்.

இதனிடையே, கூட்டணி முறிவு குறித்தோ, பாஜக குறித்தோ கருத்து தெரிவிக்காமல் அதிமுகவினர் மவுனம் காத்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் தர மறுத்தார். பாஜக, அண்ணாமலை குறித்த கேள்விக்கு  ஜெயக்குமார் மழுப்பலாக பதிலளித்தார். இந்த சமயத்தில், கூட்டணி முறிவு குறித்து பேசாமல் அதிமுகவினர் மெளனம் காத்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்ற கோணத்தில் எச்.ராஜா பேசியுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்