#Alert:தமிழகத்தில் இன்றும்,நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்றும்,நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,தமிழகம்,புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,நாளை தென் தமிழகம்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும்,நாளையும் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.