இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் இயங்கலாம் – வெ.இறையன்பு!

Published by
Rebekal

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் இன்று முதல் இயங்கலாம் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் இன்று முதல் இயங்கலாம் என தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 24 திங்கள் கிழமை அதிகாலை நான்கு மணி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருந்ததாகவும், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தளர்வுகளற்ற பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தளர்வுகள் இல்லாமல் முழு பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டாலும் சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏ.டி.எம், வங்கி சார்ந்த சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளலாம் மற்றும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த அலுவலகங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நியாயவிலை கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

16 minutes ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

1 hour ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

2 hours ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

2 hours ago

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

3 hours ago

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…

3 hours ago