இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காணொளி மூலம் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் காவல்துறையினர், நேரடியாக கூட்டம் நடத்த தடை விதித்தனர். அதற்கு பதிலாக காணொளி காட்சி மூலம் நடத்த அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டம் காணொளி மூலம் இன்று நடைபெறுமென அறிவித்தார்.அதன் படி இன்று காணொளி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…