தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வருகிற 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த இரு 3 நாளுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் 3 பேரும் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர். பின்னர் 3 பேரும் மனு தாக்கல் செய்ததும் அவர்களுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி. அன்பழகன், ராஜலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் காலியாக உள்ள பதவிகளுக்கு 6 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…