கருணாநிதி இல்லை என்றாலும், அவரின் எண்ணம், உணர்வு நம்முடன் இருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர், சிதம்பரம் புறவழிச்சாலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் பேசிய முக ஸ்டாலின், தகுதி இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக ஆகி உள்ளார் என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள். இன்னும் சொன்னால் அதிமுகவினருக்கே அந்த வருத்தம் இருக்கிறது என்று கூறியுள்ளார். சொந்த கட்சியை சேர்த்தவர்களே மதிக்கப்படாத முதலமைச்சர் தான் பழனிசாமி. தோல்வி பயம் முதல்வர் பழனிசாமிக்கு வந்துவிட்டது.
ஆட்சி அவரது கையில் இருந்து நழுவ போகிறது, அதனால் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்கிறார் முதல்வர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சுருட்ட வேண்டியது அனைத்தையும் சுருட்டி விட்டார் என்றும் அவருக்கு ஆட்சி கிடைக்க போவது இல்லை என உறுதி அளித்துள்ளார் முக ஸ்டாலின். திமுக கையில் தான் ஆட்சி வரப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தலைவர் கருணாநிதி இன்றைக்கு நம்முடன் இல்லை, அவர் இல்லை என்றாலும், அவரின் எண்ணம், உணர்வு அத்தனையும் நம்முடன் குணத்தில் இருக்கிறது. அவரால்உருவாக்கப்பட்டிருப்பவன் நான்.ஆட்சியை பார்த்துவிட்டுதான் கண்மூட வேண்டும் என்று கலைஞரிடம்எண்ணம் இருந்தது. ஆனால், வாய்ப்பைஅவருக்கு வழங்காமல் போய்விட்டோம் என்றுகுறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…