பாஜகவினரால் நடத்தப்பட்ட வேல்யாத்திரையால் பல மணிநேரம் ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல இயலாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது
பாஜக சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல்யாத்திரை நடைபெறும் என்று அறிவித்த நிலையில், அதனை எதிர்த்து தடை விதிக்க கோரி பலர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, தமிழக அரசு வேல் யாத்திரைக்கு தடை விதித்தது. ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கடந்த 6-ஆம் தேதி தமிழக அரசின் தடையை மீறி வேல்யாத்திரை நடத்தினர் .
ஆனால், அவர்களை திருத்தணியில் வைத்து போலீசார் கைது செய்து விட்டு அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்றும் இரண்டாவது தினமாக தடையை மீறி கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தினர்.
அதனால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வேல் யாத்திரையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கி அவ்விடத்தில் இருந்து நகர முடியாமல் அரை மணியாக ஒரே இடத்தில் நின்றது. அதனையடுத்து, திருவொற்றியூரிலிருந்து வேல்யாத்திரையில் கலந்து கொண்ட பாஜக தலைவர் எல்.முருகன் , கணேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…