காலியாகும் டிடிவி கூடாரம்…! அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலகல்

மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமமுக கட்சி துணை செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன் இவருடைய தலைமையில் அதிமுக கட்சியிலிருந்து விலகி வந்த தொண்டர்களுடன் தொடங்கப்பட்ட கட்சி ஆரம்பத்தில் என்னவோ அதிமுகவிற்கு சவாலாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
டிடிவி தினகரனால் கூவத்தூர் முதல் தற்போது tதகுதி நீக்கம் வரை பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டதுதற்போது நடைபெற்ற தேர்தலில் அமமுக தோல்வியை தழுவியது.இதனால் கட்சிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக தனது சாமான்களை காலி செய்து வருகின்றனர் என்பது அண்மையில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளை எல்லாம் அனைவரும் உற்று நோக்கி வருகிறோம்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அசோக் நகரில் அமமுக தலைமை அலுவலகம் இருக்கும் இடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்ககது
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025