தமிழகத்தில் இன்று உயிரிழந்தவர்களில் கொரோனா மட்டுமில்லாமல் பிற நோயால் 93 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் கடந்த 21 நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100- ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது குறையத் தொடங்கியது அந்தவகையில் இன்று 101 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்த 101 பேரில், தனியார் மருத்துவமனையில் 36 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமில்லாமல் மற்ற நோயால் பாதிக்கப்பட்டு 93 பேர் உயிரிழந்துள்ளனர் அதே நேரத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025