EnMannEnMakkal [Image Source : Twitter/@annamalai_k]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை கடந்து ஆகஸ்ட் 22ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார்.
இதன்பின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் 2ம் கட்டத்தை கடந்த மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தொடங்கினார். அதன்படி, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லுார், தேனி, திண்டுக்கல், திருப்பூர். கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் 28ம் தேதி வரை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சில நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு நிறுத்தப்பட்டது, மூன்றாவது கட்டமாக அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 6-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற இருந்த பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப். இறுதியில் கோவையில் தொடங்கவிருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறும் எனவும் பாஜக அறிவித்துள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…