#BREAKING: 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிப்பு..!

Default Image

15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஆண்டு சுதந்திரதினத்தை ஒட்டி சிறப்பாக செயல்பட்டு பணியாற்றிய 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கபப்ட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொதுமக்களின் சேவையில் தன்னயம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டுச் சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2021-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச்சேவைகான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:

1. திரு அமரேஷ் புஜாரி  இ.கா.கூடுதல் காவல்துறை இயக்குநர் தொழில்நுட்பச் சேவைகள், சென்னை.

2. முனைவர் அ.அமல்ராஜ். இ.கா.கூடுதல் காவல்துறை இயக்குநர், செயலாக்கம், சென்னை.

3. திருமதி சு.விமலா, காவல் துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு, சென்னைப் பெருநகரக்காவல்.

4. திரு ந. நாவுக்கரசன், காவல் ஆய்வாளர், கோட்டைப் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு, திருச்சி மாநகரம்.

6. திரு.பா.பிரேம் பிரசாத் தலைமை காவலர் 27845, மத்திய குற்றப்பிரிவு, சென்னைப் பெருநகரக் காவல்.

இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2021-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விரரணைக்கனை சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:

1.திருமதி. வெ.செல்வி காவல் ஆய்வாளர், திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையம் புதுக்கோட்டை மாவட்டம்.

2 திருமதி கூ.சாந்தி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, கன்னியாகுமரி.

3 திரு எஸ்.ரவி காவல் ஆய்வாளர், கொமாரபாளையல் காவல் நிலையம், திருச்செங்கோடு உட்கோட்டம், நாமக்கல் மாவட்டம்.

4. திருமதி க.சாயிலெட்சுமி காவல் ஆய்வாளர், நேசமணி நகர் வட்டம், கன்னியாகுமரி மாவட்டம்.

5.திருமதி ஆ.அமுதா, காவல் ஆய்வாளர், சத்திரக்குடி காவல் நிலையம், இராமநாதபுரம்.

6.திருமதி வே.சந்தானலட்சுமி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புவனாய்வுத்துறை, திண்டுக்கல்.

7. திரு சு.சீனிவாசன், காவல் ஆய்வாளர், திருநாவலூர் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

8.திரு மு.கனகசபாபதி காவல் ஆய்வாளர், பி2 ஆர்.எஸ் புரம் சட்டம் மற்றும் ஓழுங்குக் காவல் நிலையம், கோவை மநகரம்.

9. திரு க.ஆடிவேல், காவல் ஆய்வாளர், தென்காரி காவல் நிலையம். தென்காசி மாவட்டம்.

10. திருமதி ப.ஆனந்தலட்சுமி, காவல் உதவி ஆய்வாளர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சேலம் மாவட்டம்

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war