பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ் பயிற்சிக்கு வந்த பெண் ஒருவர்தனக்கு கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, கெபிராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. பின்னர், சிபிசிஐடி போலீசார் இரண்டு நாட்கள் கெபிராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். மேலும், கெபிராஜ் வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தி போலீசார், அங்கு லேப்டாப், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து ஆய்வு உட்ப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணையும் போலீசார் வெளியிட்டார்கள். புகார் கொடுப்பவர்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் ஒரு பெண் ஒருவர் கெபிராஜ் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் பயிற்சிக்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கெபிராஜ் மீது மேலும் பெண் ஒருவர் புகார் மின்னஞ்சல் மூலம் சி.பி.சி.ஐ.டி.யிடம் புகார் அளித்துள்ளார். கெபிராஜ் மீது புகார் அளித்துள்ள பெண் வெளிநாட்டில் இருப்பதால் வீடியோ மூலமாக வாக்குமூலம் பெற சிபிசிஐடி திட்டமிடுள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…