அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் நியமனம்!

admk office

அதிமுகவில் புதிய புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் மற்றும் கொள்கை பரப்பு இணை செயலாளரை நியமனம் செய்து அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ஜெ.சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்செல்வன், கும்பகோணம் மாநகர செயலாளராக ராம.ராமநாதன், தஞ்சை மாநகர செயலாளராக சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக சு.ரவி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக சுகுமார், திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இராமச்சந்திரன், மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா, வடக்கு மாவட்ட செயலாளராக தூசி மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்  மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதேபோல், அதிமுக அமைப்பு செயலாளர்களாக பாஸ்கரன், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, ஆர்.மனோகரன், வி.ராமு, ராயபுரம் மனோ, துரை செந்தில், ஆர்.காந்தி ஆகியோரை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அன்வர் ராஜாவுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக நடிகை விந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார் நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்