பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் முதல்வரிடம் ஆலோசித்து பணி நியமன ஆணையம் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 41 பேர் கணினி பழுதானதால் செல்போன் மூலமாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க உத்தரவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை கோபியில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த பட்டதாரி ஆசிரியர்களிடம், 2018-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் முதல்வரிடம் ஆலோசித்து பணி நியமன ஆணையம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…