திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து பேரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா,உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 18,552 ஆகவும்,384 பேர் பலியாகியுள்ளதாகவும்,10,244 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 15,685 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2,95,881 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து; அவர் சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…