அதிமுகவினர்கள் புனிதர்களா? கோடநாடு பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்? – சீமான்

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுகவில் இருப்பவர்கள் புனிதமானவர்கள் என்பதை காட்ட திமுக ஊழல் பட்டியலை வெளியிடுகிறாரா அண்ணாமலை என்று சீமான் கேள்வி.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், தமிழகத்தில் கடலூரில் விவசாய நிலங்களை அழித்து NLC நிலம் கையகப்படுத்துகிறது. விவசாயிகளை மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிக்கிறது. விவசாயங்களை அழிப்பது ஏற்புடையது அல்ல என குற்றச்சாட்டினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்திக்கிறார். அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை பேசி வருகிறார். திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை அதிமுகவினர் செய்த ஊழல் பட்டியல்களை ஏன் வெளியிடவில்லை? என கேள்வி எழுப்பினார். இதுபோன்று, கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு குறித்து ஏன் அண்ணாமலை வாய் திறக்கவில்லை.

அதிமுகவினர்கள் புனிதர்களா?, கோடநாடு பங்களாவில், அங்கே 24 மணிநேரமும் மின் இணைப்பு இருக்கும். ஆனால், கொள்ளை, கொலை சம்பவத்தன்று மின் இணைப்பை துண்டிக்க சொன்னது யார்? எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு உள்ளது என விமர்சித்தார். தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடிகளும், ஊழல்வாதிகளும் பாஜகவில் தான் இருக்கிறார்கள்.

அதிமுகவில் இருப்பவர்கள் புனிதமானவர்கள் என்பதை காட்ட திமுக ஊழல் பட்டியலை வெளியிடுகிறாரா எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை நடைபயணம் மூலம் தாமரை தமிழ்நாட்டில் மலராது, தண்ணீரில் தான் மலரும். பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது?, அடுத்த பிரதமராக மோடி வந்தால் நாட்டையே அழித்து விடுவார். அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என்றும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

36 minutes ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

59 minutes ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

2 hours ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

3 hours ago

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago