சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டியில் வானுார்தி பொறியியல் பாடப்பிரிவின் உதவி பேராசிரியராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் பானர்ஜி என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் வானுார்தி பொறியியல் பிரிவிற்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்து உள்ளார்.
அந்த ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையை பயன்படுத்த சென்ற மாணவி ஒருவர் சுவற்றில் செல்போன் கேமரா போன்று இருப்பதை பார்த்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.அந்த மாணவியின் சத்தம் கேட்டு வந்த நபர்கள் அருகில் இருந்த அதே துறையை சார்ந்த உதவி பேராசிரியராக சுபம் பானர்ஜியை பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் பெண்கள் கழிவறையில் உள்ள தண்ணீர் செல்லும் பைப்புகள் இடையே உள்ள ஓட்டை வழியாக செல்போன் வைத்து வீடியோ எடுப்பது சுபம் பானர்ஜி வாடிக்கையாக வைத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
பல பெண்களை வீடியோ எடுத்ததை உதவி பேராசிரியர் ஒப்புக்கொண்டார்.அவரது வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.மேலும் உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…