பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!
ஆம்ஸ்ட்ராங் நினைவு தினத்தை ஒட்டி, ஆவடி அருகே பொத்தூர் கிராமத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 அன்று சென்னை, பெரம்பூர், வெணுகோபால் சுவாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் சங்கமம் நடைபெற்று வருகிது.
பொத்தூரில் உள்ள வள்ளலார் நினைவிடத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர்.அதில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, எந்தவித அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.