தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணம் வைத்து விளையாடுவோர் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும் என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது தடுக்கப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம் ஆறு மாதம் சிறை தண்டனை என தெரிவிக்கப்பட்டது.ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம் ,2 ஆண்டு சிறை தண்டனை எனவும் தெரிவிக்கப்பட்டது.எனவே தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில், “ஜங்லி கேம்ஸ் ” நிறுவனம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.இந்த வழக்கில் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ரம்மி விளையாட்டு சூதாட்ட விளையாட்டு இல்லை என்றும் திறமையை வளர்க்கக்கூடிய விளையாட்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக “ஜங்லி கேம்ஸ் ” நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.மேலும் எங்களது நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை பொறுத்தவரை பணம் செலுத்தியும் விளையாடலாம் ,பணம் செலுத்தாமலும் விளையாடலாம் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் அரசின் அவசர சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.இதை ஏற்க மறுத்த நீதிமன்றம்,டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் தமிழக தலைமை செயலாளர் ,உள்துறை ,சட்டத்துறை பதில் அளிக்க கோரி வழக்கினை அன்றைய தினம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…