[Representative Image]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதற்கு குருவாக இருந்தவர். பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது.
பங்காரு அடிகளாருக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு..!
ஆதிபராசக்தி கோயிலில் மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் பூசை நடத்தலாம் என்ற புரட்சியை 35 ஆண்டுகளுக்கு முன்னரே செய்தவர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இவரது உடலுக்கு ஆன்மீக தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், இவரது மறைவையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக செங்கல்பட்டு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…