Vanathi srinivasan [Image source : Facebook/palanikumarbjpit]
தனது அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
நேற்று மாலை கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் திடீரென ஒரு மர்ம நபர் புகுந்தார். உடனே அங்கிருந்த ஊழியாரால் அவர் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட சில மணிநேரத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். எம்எல்ஏ அலுவலகத்தில் திடீரென புகுந்த நபர் பின்னர் இறந்து போன சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், நேற்று மாலை 5.30 மணியளவில் மர்ம நபர் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளார். உடனே அலுவலக உதவியாளர் அந்த மர்ம நபரை அங்கிருந்து விரட்டியுள்ளார்.
அதன் பிறகு அந்த மர்ம நபர் உயிரிழந்த செய்தியை நான் கேள்விப்பட்டேன். அவர் மது போதையிலோ அல்லது வேறு ஏதேனும் போதை வஸ்துக்களை உட்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது. என கூறினார். மேலும், தங்கள் அலுவலகத்தில் புகுந்த நபர் பற்றி நேற்றே புகார் அளித்து விட்டோம்.
காவல்துறை ஆய்வாளரிடம் இது பற்றி கூறி, விசாரிக்க கோரியுள்ளேன் எனவும் தெரிவித்தார். அந்த மர்ம நபர் புகுந்த நேரத்தில் நான் கோவையில் பணிபுரியும் முதல் பெண் பேருந்து ஓட்டுனரை பார்க்க சென்று இருந்தேன். என தனது தரப்பு விளக்கத்தை கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…