BJP state executive hacked to death. annamalai voice rise. [Image Source :Twitter/ @annamalai_k]
குற்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மாநில முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் என அண்ணாமலை அறிவிப்பு.
பூவிருந்தமல்லியில் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக மாநில நிர்வாகியுமான பி.பி.ஜி சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற சங்கரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
சங்கர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மர்ம நபர்கள் கொலை செய்தனர். பாஜக மாநில நிர்வாகி சங்கரை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. கொலை செய்யப்பட்ட சங்கர் பாஜக எஸ்.சி. எஸ்டி, மாநில பொருளாராக உள்ளார்.
பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கரை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்பது குற்ற சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மாநில முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…