அரசு பள்ளிகளில் இனி காலை உணவு… மாணவர்களின் நலனை கையில் எடுக்கும் எடப்பாடி..

Published by
Kaliraj
  • தமிழகத்திலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக காலை உணவுத் திட்டத்தை கடந்த வருடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  முயற்சியால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அறிமுகப்படுத்தியிருந்தார்.
  • இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த  தமிழக முதல்வர் எடப்பாடி முடிவு.

இதன்படி காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என மாணவ-மாணவிகளுக்கு தற்போது  வழங்கப்பட்டு வருகிறது.மேலும்  “மாநகராட்சிப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும் இந்த  காலை உணவுத் திட்டத்தினால் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது. இதனால் ஏனைய தமிழக பகுதியிலுள்ள மாணவர்களையும் அரசு பள்ளியில் கற்க வைப்பதற்க்காக  இதனை முன்னோடித் திட்டமாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இந்த மகத்தான  திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Image result for சத்துணவு திட்டம்

இதன்  மூலம் அரசு பள்ளிகளை நோக்கி குழந்தைகளை அதிக அளவில் ஈர்க்க முடியும்” என்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர்  வேலுமணி யோசனை கூற அதனை அப்படியே ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி , காலை உணவாக வழங்கப்படும் இட்லி, தோசை, பொங்கலோடு, பயிறு வகைகளையும் இணைத்து காலை சத்துணவாக கொடுக்கலாம் எனறு  தெரிவித்திருக்கிறார் என கூறுகின்றனர் உள்ளாட்சித்துறை அதிகாரிகள்.

 

இந்த திட்டத்தை விரிவுபடுத்த தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, காலையில் சத்துணவு என்கிற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடமும் விவாதித்துள்ளார். இந்த திட்டம் நிறைவேறினால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் இரு நேர பசியை போக்கிய சேவையை இந்த அரசு பெரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Published by
Kaliraj

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

6 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

6 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

7 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

8 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

8 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

8 hours ago