#BREAKING: சட்ட மசோதா நிறைவேற்றம் – அமைச்சர் பெரியகருப்பனை கண்டித்து அதிமுக வெளிநடப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் பெரிய கருப்பன் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என ஓபிஎஸ் பேட்டி.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், இதனை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

உதகையில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்து  வரும் நிலையில், சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. கர்நாடகா மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்களை மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும். தெலங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது. 1923-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக சட்டம் உட்பட 13 பல்கலைக்கழகங்களின் சட்டம் திருத்தப்படவுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தது. இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், துணைவேந்தர்கள் நியமன மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்த நிலையில், அதிமுக உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு சட்டமன்ற நடவடிக்கையில் அதிமுக சார்பாக உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்ட பொழுது, அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் மரியாதை குறைவாக பேசியதால், அதிமுக சார்பாக அவரை கண்டித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டு கொண்டியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

4 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

5 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

6 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

7 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

8 hours ago