ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை.
மதுரையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் விதிகளை பின்பற்ற கோரி ஜாகிர் உசேன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் பொதுமக்களிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆட்டோ, டாக்சியில் கட்டணம் மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குற்றமாக பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரையில் கட்டண மீட்டர் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே சான்றுதல் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஆட்டோ, டாக்சியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை ஆர்டிஓக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…