கடந்த இரண்டு நாட்களாக பிகில் படத்தின் வசூல் அடிப்படையில் போலி கணக்கு மூலம் வருமானத்தை குறைத்து வரி ஏய்ப்பு செய்தாக நடிகர் விஜய், AGS தயாரிப்பு நிறுவனம் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதில் நடிகர் விஜய்யை மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு அவரது நீலாங்கரை, சாலிகிராமம் மற்றும் பனையூர் வீடுகளில் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது விஜயின் பிகில் பட சம்பளம் 30 கோடி என வருமான வரித்துறை தெரிவித்தது. இதைத்தவிர வேறு எந்த ஆவணங்களும், பணமும் விஜயிடம் இருந்து பறிமுதல் செய்யப்படவில்லை என தெரிவித்தது. பின்னர் வருமான வரித்துறை விசாரணை விஜயிடம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் இன்று நெய்வேலியில் உள்ள மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். அப்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி 2-வது சுரங்கம் முன்னர் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தது தவறு எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10-ம் வரை படப்பிடிப்பு நடத்த என்எல்சி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…