தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டபேரவையில் குறு – சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை,மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்டவைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் போலி பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், யாரேனும் போலி பத்திரத்தை பதிவு செய்திருந்தால் அதை பத்திரப்பதிவு தலைவரே நீக்கம் செய்ய வழிவகை உண்டு.இந்த சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக,போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் சென்று மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.தற்போது,இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு,அதை பத்திரப்பதிவு தலைவரே நீக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…