குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி முதனிலை & முதன்மை தேர்வு என இருநிலைகளாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமான நிலையில் கட்டுப்பாடுகளை விதித்தது டிஎன்பிஎஸ்சி.குறிப்பாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் தேர்வர்களின் கைரேகை பெறப்பட்டு ஆதாருடன் ஒப்பிட்ட பிறகே இனி தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ் புதிய மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது .அதாவது ,குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்படுகிறது. அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…